Thursday, December 27, 2007

kurai prasavam

ஏழை யின்
வீட்டுச்சுவற்றிற்க்கும்
வெள்ளை அடிக்கபடுகிறது.
தேர்தல் விளம்பரத்திற்க்காக.



ஏழைக்கும் பணக்காரணுக்கும்
என்ன வித்தியாசம்?
ஏழை
கிழிந்த உடைகளை அணிவான்.
பணக்காரன்
உடைகளை கிழித்து அணிவான்.



நாங்கள்தான் ஏழைகள்
அறை குறை
ஆடைகளுடன் திரிகிறோம்.
நீங்கள் ஏன்
நாகரீக மங்கைகளே?



அழகான பொம்மைகள்தான்
ஆனால்
ரசிக்க முடியவில்லை
வற்றிய குரலுடன்
கூவி விற்றுகொண்டிருக்கும்
சிறுவனின் கையில் இருப்பதால்.




வித விதமான
படையல்களுடன்
விருந்து.
பசியால் இறந்தவனுக்கு
திவசம்.



மலிவாக
கிடைப்பதனால்
ஏழையின் டைரி
பிப்ரவரியில் இருந்தே
எழுதப்படுகிறது.



அழுக்கு துணிகளை
மட்டுமே மாட்டிக்கொண்டிருக்கிறது
பேச்சலர் ரூமில் ஏங்கர்.




தொட்டில் குழந்தைகள்
திட்டத்தில் கைவிடப்பட்ட
குழந்தைகள் அரசு காப்பகத்தில்
ஒன்றாக பாடுகின்றன
‘அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா’
அர்த்தம் புரியாமல்.




தெருவோர
பிச்சைக்காரனுக்கும்
தெருமுனை
நாய்க்கும் சண்டை.
எச்சில் இலை சோற்றுக்காக.




ஓடி ஓடி
உபசரிக்கிறாள் மருமகள்.
ஒன்றாம் தேதி
ஓய்வூதியத்திற்க்காக.





சாலையோர
பிச்சைக்காரன்
தினமும் செய்கிறான்
ரத்ததானம்.
சாக்கடையில் வாழும்
கொசுக்களுக்கு.




வீதியில் வெண்ணிலா.
வெள்ளைபுடவையில் அவள்.
விதவை.




பலத்த பாதுகாப்புடன்
விநாயகர் ஊர்வலம்.
கடவுளே காப்பாற்று
என்று பக்தர்கள்.




பாட்டிக்கு கதை
சொல்லத்தெரிகிறது.
ஆனால்,
பாட்டி ஒரு கதை சொல்
எனகேட்க பேத்திக்கு தான்
தெரியவில்லை.




சுதந்திரதின விழாவை
கொண்டாடுகிறார்கள்.
பலத்த பாதுகாப்புடன்.